என் மலர்
ஐ.பி.எல்.

மகளிர் பிரீமியர் லீக்: குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்

- முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 213 ரன்கள் எடுத்தது.
- நாட் ஸ்கைவர் பிரண்ட், ஹேலி மேத்யூஸ் என இருவரும் அரை சதம் கடந்தனர்.
மும்பை:
மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரில் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் நாட் ஸ்கைவர் பிரண்ட், ஹேலி மேத்யூஸ் ஜோடி அதிரடியாக விளையாடியது. இருவரும் அரை சதம் கடந்து 77 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கடைசி கட்டத்தில் இறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 12 பந்தில் 36 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் ஜெயண்ட்ஸ் களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர். டேனில் கிப்சன் 34 ரன்னும், லிட்ச்பீல்டு 31 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைக்கவில்லை.
இறுதியில், குஜராத் அணி 166 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.