என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஆட்டநாயகன் விருது வென்ற சாஹலுக்கு வாழ்த்து தெரிவித்த பெண் தோழி- வைரலாகும் இன்ஸ்டா பதிவு
    X

    ஆட்டநாயகன் விருது வென்ற சாஹலுக்கு வாழ்த்து தெரிவித்த பெண் தோழி- வைரலாகும் இன்ஸ்டா பதிவு

    • கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.
    • இந்த வெற்றிக்கு 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்திய யுஸ்வேந்திர சாஹல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    முல்லான்பூர்:

    ஐபிஎல் தொடரின் நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்திய யுஸ்வேந்திர சாஹல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் அவரது காதலியாக சொல்லப்படும் ஆர்.ஜே. மாவாஷ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் "என்ன ஒரு திறமையான மனிதர் இவர்! ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியதற்கு இதுவும் ஒரு காரணம்" என கூறியுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

    பலரும் அவர்கள் இருவரும் காதலில் இருப்பது இந்த பதிவின் மூலம் உறுதியாகிவிட்டது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ஐபிஎல் தொடரில் சாஹல் 166 போட்டிகளில் விளையாடி 211 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். மேலும் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளரும் சாஹல் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×