என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    சூப்பர் ஸ்ட்ரைக்கர் சூர்யவன்ஷி முதல் Fair play சி.எஸ்.கே வரை.. யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?
    X

    சூப்பர் ஸ்ட்ரைக்கர் சூர்யவன்ஷி முதல் Fair play சி.எஸ்.கே வரை.. யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?

    • இறுதிப்போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
    • 14 வயது வைபவ் சூர்யவன்ஷி சீசனின் சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதைப் பெறுகிறார்.

    ஐபிஎல் 2025 சீசனில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் சீசனில் திறமையை வெளிப்படுத்திய வெவ்வேறு அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

    அதன்படி, குருணால் பாண்டியா ஆட்ட நாயகன் விருதுக்கு தேவானார். அதிக ரன் அடித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பி மற்றும் அதிக விக்கெட் வீழ்த்திய வீரருக்கான ஊதா நிற தொப்பியை குஜராத் அணியின் சாய் சுதர்சன் (759 ரன்) மற்றும் பிரசித் கிருஷ்ணா (25 விக்கெட்) ஆகியோர் கைப்பற்றினர்.

    சாய் சுதர்சன் போட்டியின் வளர்ந்து வரும் வீரராக தேர்வானார். மேலும் அதிக 4 (ரன்கள்) (88 பவுண்டரிகள்) அடித்ததற்கான விருதை சாய் சுதர்சன் வென்றார்.

    ஃபேர்பிளே விருது சென்னை சூப்பர் கிங்ஸுக்கு வழங்கப்படுகிறது. சீசனில் அதிக சிக்ஸர்கள் (40 சிக்ஸர்கள்) அடித்ததற்கான விருதை நிக்கோலஸ் பூரன் பெறுகிறார்.

    சீசன் முழுவதும் 206 ஸ்ட்ரைக் ரேட்டிற்காக 14 வயது வைபவ் சூர்யவன்ஷி சீசனின் சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதைப் பெறுகிறார். சீசனின் சிறந்த கேட்சுக்கான விருதை கமிந்து மெண்டிஸ் பெறுகிறார்.

    Next Story
    ×