என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் வரலாற்றில் உடைக்கப்பட்ட முக்கிய சாதனைகள்
- ரஷித் கான் 15 போட்டிகளில் 33 சிக்சர்களை வழங்கி மோசமான சாதனையை படைத்துள்ளார்
- கடந்த சீசனில் 1,260 சிக்சர் மற்றும் 2,174 பவுண்டரி எடுக்கப்பட்டது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி கோப்பை கைப்பற்றியது.
இதுவரை நடந்த 17 சீசன்களை விட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சீசனில் அதிகபட்சமாக 52 முறை 200 ரன்களுக்கு மேல் குவிப்பு (கடந்த ஆண்டில் 41 முறை), 1,294 சிக்சர் மற்றும் 2,245 பவுண்டரிகள் (கடந்த சீசனில் 1,260 சிக்சர் மற்றும் 2,174 பவுண்டரி) விளாசியது முக்கியமான சாதனைகளாகும்.
மேலும் இளம் வயதில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரராக வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்தார். மேலும் இளம் வயதில் சதம் அடித்த வீரராகவும் அதிக வேக சதம் அடித்த வீரராகவும் இவர் சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய வீரராக அபிஷேக் சர்மா (ஐதராபாத்) சாதனை படைத்துள்ளார். அவர் பஞ்சாப் அணிக்கு எதிராக 55 பந்தில் 141 ரன்கள் விளாசினார்.
ஆரஞ்சு தொப்பியை வென்ற இளம் வயது வீரர் என்ற சாதனையை தமிழக வீரர் சாய் சுதர்சன் (23 வயது) தட்டிச் சென்றார். அவர் 15 போட்டிகளில் 759 ரன்கள் குவித்துள்ளார்.
ஹோம் மைதானத்தை விட மற்ற மைதானங்களில் 100 சதவீதம் வெற்றியை பதிவு செய்த அணியாக ஆர்சிபி சாதனை படைத்ததுள்ளது.
ஒரு சீசனில் 700 ரன்கள் எடுத்த முதல் தொடக்க வீரர் அல்லாத வீரர்: சூர்யகுமார் யாதவ் 16 போட்டிகளில் 717 ரன்கள் எடுத்தார். ஒரு சீசனில் 700 ரன்கள் எடுத்த முதல் தொடக்க வீரர் அல்லாத வீரர் இவர்தான்.
மூன்று வெவ்வேறு அணிகளுடன் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் கேப்டன் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றார்.
ஐபிஎல் வரலாற்றில் வெவ்வேறு அணிகளுடன் தொடர்ச்சியாக இறுதிப் போட்டியை எட்டிய முதல் கேப்டன் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றார்.
ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக டி20 போட்டியில் 200+ ரன்கள் இலக்கை துரத்திய முதல் அணியாக பஞ்சாப் கிங்ஸ் ஆனது.
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக, சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.
ஐபிஎல் வரலாற்றில் 200 ஆட்டமிழப்புகளை நிறைவு செய்த முதல் விக்கெட் கீப்பர்-பேட்டர் என்ற பெருமையை எம்எஸ் தோனி பெற்றார். இதுவரை விளையாடிய 278 போட்டிகளில் 154 கேட்சுகள் மற்றும் 47 ஸ்டெம்பிங் செய்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் 150 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் சாதனை படைத்தது.
ஐபிஎல் வரலாற்றில் 1000 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் இழப்பின்றி 200+ ரன்கள் இலக்கை துரத்திய முதல் அணி குஜராத் டைட்டன்ஸ். இந்த சாதனையை சாய் சுதர்சனும் சுப்மன் கில்லும் நிகழ்த்தினர்.
இரண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வீரர் குர்ணால் பாண்ட்யா.
2025 ஐபிஎல் தொடரில், 10 அணிகள் 74 போட்டிகளில் மொத்தம் 26,381 ரன்கள் எடுத்தன. இதில் 2,245 பவுண்டரிகள், 1,294 சிக்ஸர்கள் மற்றும் 52 200-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தனர்.
டி20 போட்டிகளில் ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த சாதனையை சுனில் நரைன் முறியடித்தார். இதுவரை விளையாடிய 198 டி20 போட்டிகளில், நரைன் 210 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல்லில் அதிக 50 ரன்கள் (63) மற்றும் அதிக 50+ ரன்கள் (71) எடுத்த சாதனையை கோலி படைத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கேஎல் ராகுல் பெற்றார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியின் போது, ஐபிஎல்லில் அதிக பவுண்டரிகள் எடுத்த சாதனையை கோலி முறியடித்தார்.
ஐபிஎல் 2025 சீசனில் அர்ஷ்தீப்சிங் 17 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலம் ஒரு சீசனில் பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பியூஷ் சாவ்லாவின் சாதனையை முறியடித்தார்.
2025 ஐபிஎல் சீசனில் டி20 போட்டிகளில் ஒரு அணிக்காக 300 சிக்ஸர்கள் அடித்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
மே 30 அன்று ஜிடிக்கு எதிரான ஐபிஎல் 2025 எலிமினேட்டர் போட்டியில் ரோஹித் சர்மா மும்பை அணிக்காக நான்கு சிக்ஸர்கள் அடித்தார், இதன் மூலம், ஐபிஎல்லில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் மற்றும் இரண்டாவது பேட்டர் ஆனார்.
மோசமான பந்துவீச்சு புள்ளிவிவரங்கள்:
மார்ச் 23 அன்று ஐதராபாத்தில் நடந்த போட்டியில் நான்கு ஓவர்களில் 76 ரன்கள் விட்டுக் கொடுத்து மோசமான சாதனையை படைத்த பந்து வீச்சாளராக ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளார்.
ரஷீத் கான் 15 போட்டிகளில் 33 சிக்சர்களை வழங்கியுள்ளார். இது ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்சர்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையாகும்.






