என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்திய பவுலர்களை மிரள வைத்த டேரில் மிட்செல்: 3-வது போட்டியிலும் அரைசதம் விளாசல்
    X

    இந்திய பவுலர்களை மிரள வைத்த டேரில் மிட்செல்: 3-வது போட்டியிலும் அரைசதம் விளாசல்

    • முதல் போட்டியில் 84 ரன்கள் அடித்திருந்தார்.
    • 2-வது போட்டியில் ஆட்டமிழக்காமல் 131 ரன்கள் விளாசியிருந்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    நியூசிலாந்து அணியின் டேவன் கான்வே, ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில், நிக்கோலஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அடுத்து கான்வே உடன் வில் யங் ஜோடி சேர்ந்தார். 2-வது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கான்வே ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கான்வே 4 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு வில் யங் உடன் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். இநத் ஜோடி நம்பிக்கையுடன் விளையாடியது. என்றாலும் ஹர்ஷித் ராணா இந்த ஜோடியை பிரித்தார். வில் யங் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது.

    4-வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல் உடன் கிளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக டேரில் மிட்செல் அடிக்க வேண்டிய பந்த தவறாமல் அடித்து பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விராட்டினார். அவர் 56 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    டேரில் மிட்செல் முதல் போட்டியில் 71 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 84 ரன்கள் அடித்திருந்தார். 2-வது போட்டியில் 117 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 131 ரன்கள் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தார்.

    தற்போது அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். 3 போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×