என் மலர்
கிரிக்கெட் (Cricket)

2-வது ஒருநாள் போட்டி: அரைசதம் அடித்து இந்தியாவை மிரட்டும் யங்- மிட்செல் ஜோடி
- நியூசிலாந்து தொடக்க வீரர்கள் டேவன் கான்வே (16), ஹென்றி நிக்கோலஸ் (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
- டேரில் மிட்செல் அரைசதம் அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா கே.எல். ராகுல் (112 நாட்அவுட்) சதத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் குவித்தது.
பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டேவன் கான்வே (16), ஹென்றி நிக்கோலஸ் (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு வில் யங் உடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. மிட்செல் 52 பந்தில் அரைசதமும், வில் யங் 68 பந்தில் அரைசதமும் அடித்தனர்.
இருவரும் அரைசதம் கடந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். 31 ஓவர் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி வெற்றி்கு 19 ஓவரில் 128 ரன்கள்தான் தேவை. இந்திய அணி விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தாவிடில், நியூசிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதனால் போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.






