என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது ஒருநாள் போட்டி: கோலியால் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்
    X

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது ஒருநாள் போட்டி: கோலியால் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

    • 3-வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த நவம்பர் 28-ஆம் தேதி தொடங்கியது.
    • இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்கா அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றிய நிலையில், தற்போது ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது.

    இதில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, நாளை (டிச.6) விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி, தொடரைக் கைப்பற்றும்.

    இந்த நிலையில், இம்மைதானத்தில் மந்தமாக இருந்த டிக்கெட் விற்பனை, தற்போது விராட் கோலியின் அடுத்தடுத்த சதங்களால் அனைத்தும் விற்று தீர்ந்தது.

    3-வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த நவம்பர் 28-ஆம் தேதி தொடங்கியது. ஆனால், அப்போது ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஆன்லைன் விற்பனை மந்தமாக இருந்ததால், கவுண்டர் விற்பனையைத் தொடங்கலாமா என்று ஆந்திர கிரிக்கெட் சங்கம் (ACA) யோசித்தது. ஆனால், ராஞ்சி மற்றும் ராய்ப்பூர் போட்டிகளில் விராட் கோலி அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசியதும் நிலைமை தலைகீழாக மாறியது.

    இதுகுறித்து ஆந்திர கிரிக்கெட் சங்கம் அதிகாரி கூறியதாவது, "ஆரம்பத்தில் வரவேற்பு இல்லை. ஆனால் கோலி சதம் அடித்த பிறகு, 2-ஆம் கட்ட மற்றும் 3-ஆம் கட்ட டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. ரூ.1,200 முதல் ரூ.18,000 வரையிலான டிக்கெட்டுகள் என எதுவும் மிச்சமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×