என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் வேண்டாம்- ரவி சாஸ்திரி
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் வேண்டாம்- ரவி சாஸ்திரி

    • இப்போட்டியில் வருண் சக்கரவர்த்தி இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருக்க முடியும்.
    • பிளேயிங் லெவனில் மாற்றங்கள் தேவையில்லை.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

    மேற்கொண்டு இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறும் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் இந்திய அணி பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என்று முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அடுத்த போட்டி இன்னும் 48 மணி நேரம் கழித்து, அதே லெவன் அதே நிலையிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆடுகளம் சற்று சோர்வாகத் தெரிகிறது. இது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும். எனவே பிளேயிங் லெவனில் மாற்றங்கள் தேவையில்லை. இப்போது வருன் சக்ரவர்த்தி இருக்கும் ஃபார்மில் அவரைத் தடுப்பது கடினம், அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவரது நம்பிக்கை அதிகமாக உள்ளது.

    மேற்கொண்டு எதிரணி வீரர்களும் அவரை அதிகம் எதிர்கொண்டது கிடையாது. இதுபோன்ற சூழ்நிலையில், அவர் இப்போட்டியில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாகவும் இருக்க முடியும். மேற்கொண்டு இப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 240 அல்லது 250 ரன்களுக்கு மேல் எடுத்தால், நிச்சயம் அரையிறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும்.

    என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×