என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 உலக கோப்பை தொடர்: இலங்கை அணியில் இணையும் லசித் மலிங்கா
- 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது.
- இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியை சிறந்த முறையில் தயார்படுத்துவதற்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் உதவியை இலங்கை கிரிக்கெட் வாரியம் நாடியுள்ளது. அவரை குறுகிய கால அடிப்படையில் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக நியமித்துள்ளது.
2014-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை இலங்கை அணி மலிங்கா தலைமையில் வென்றது நினைவு கூரத்தக்கது.
Next Story






