என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணியுடன் இணைய மறுத்த பயிற்சியாளர் கில்லெஸ்பி
- இங்கிலாந்து தொடரின்போது சில முடிவுகள் எடுக்க கில்லெஸ்பிக்கு நேரம் கொடுக்கப்படவில்லை.
- துணை பயிற்சியாளரின் பதவிக்காலத்தை நீடிக்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது.
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கில்லெஸ்பி உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்த சில முடிவுகள் கில்லெஸ்பிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் ஒயிட்பால் அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒயிட்பால் தொடர் முடிவடைந்த உடன் வருகிற 26-ந்தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியுடன் துபாய் வழியாக கில்லெஸ்பி தென்ஆப்பிரிக்கா செல்ல வேண்டும். ஆனால் கில்லெஸ்பி குறித்து எந்த தகவலும் இல்லை எனத் தெரிகிறது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நம்பப்படுகிறது.
இந்த வருடம் தொடக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கில்லெஸ்பியை இரண்டு வருடத்திற்கு டெஸ்ட் அணி பயிற்சியாளராக நியமித்தது. வங்கதேசத்திற்கு எதிராக முதன்முறையாக டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிராக தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது சில முடிவுகளை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கால அவகாசம் கொடுக்காததால் கில்லெஸ்பி அதிப்தி அடைந்துள்ளார். துணை பயிற்சியாளர் டிம் நீல்சனின் பதவிக் காலத்தை நீடிக்காததால் வருத்தத்தில் இருந்துள்ளார்.






