என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ENGvsIND 4th Test சதம் விளாசினார் ஜோ ரூட்..!
    X

    ENGvsIND 4th Test சதம் விளாசினார் ஜோ ரூட்..!

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 38ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.
    • இந்த தொடரில் ஜோ ரூட்டின் 2ஆவது சதம் இதுவாகும்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது, பென் ஸ்டோக்ஸ் (5 வி்க்கெட்) அபாரமாக பந்து வீச இந்தியா 358 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் (58), சாய் சுதர்சன் (61), ரிஷப் பண்ட் (54) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டக்கட் மற்றும் கிராவ்லி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ரன்ரேட் ஓவருக்கு சராசரியாக 5 என்ற அளவில் வந்து கொண்டிருந்தது. கிராவ்லி 84 ரன்களும், டக்கட் 94 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 46 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் அடித்தது. போப் 20 ரன்களுடனும், ஜோ ரூட் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆலி போப் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹாரி ப்ரூக் 3 ரன்னில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்.

    5ஆவது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஜோ ரூட் டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே 37 சதங்கள் அடித்துள்ளார். இது அவரின் 38ஆவது சதமாகும். இந்தத் தொடரில் இது அவரின் 2ஆவது சதமாகும்.

    Next Story
    ×