என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ENGvIND 4th Test: ஒரே போட்டியில் 10 சாதனைகளை முறியடித்த ஜோ ரூட்
    X

    ENGvIND 4th Test: ஒரே போட்டியில் 10 சாதனைகளை முறியடித்த ஜோ ரூட்

    • இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 544 ரன்கள் குவித்தது.
    • ஜோ ரூட் சிறப்பாக ஆடி 150 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

    ஜோ ரூட் சதம் அடித்தார். அவர் 150 ரன்னும் , பென் டக்கெட் 94 ரன்னும் , கிராவ்லி 84 ரன்னும் , பென் ஸ்டோக்ஸ் 77 ரன்னும் ( அவுட் இல்லை), ஆலி போப் 71 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், பும்ரா, கம்போஜ், சிராஜ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றி னார்கள்.

    இங்கிலாந்து அணி 186 ரன் முன்னிலை பெற்று உள்ளது. கைவசம் 3 விக்கெட் இருக்கிறது.

    ஜோ ரூட் நேற்று 10 சாதனைகளை முறியடித்தார். அதன் விவரம் வருமாறு:-

    1. டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ராகுல் டிராவிட் (13, 288 ரன்), காலிஸ் (13, 289), ரிக்கி பாண்டிங் (13,378) ஆகி யோரை ஜோ ரூட் முந்தினார். அவர் 13,409 ரன்க ளுடன் தெண்டுல்கருக்கு (15,921 ரன்) அடுத்தப்படியாக 2-வது இடத்தில் உள்ளார்.2

    2. 157-வது டெஸ்டி விளையாட்டில் அவருக்கு 38-வது சதமாகும். இதன் மூலம் ஜோ ரூட் இலங் கையை சேர்ந்த சங்ககராவை சமன் செய்தார். டெண்டுல்கர் (51 சதம்), காலிஸ் (45), பாண்டிங் (41) ஆகியோருக்கு அடுத்தபடி யாக உள்ளார்.

    3. இந்தியாவுக்கு எதிராக அதிக சதம் (12) எடுத்தவர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்தார். அவர் ஸ்டீவ் சுமித்தை (11 செஞ்சுரி) முந்தினார்.

    4. இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் ஜோ ரூட் 9-வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் அவர் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) சாதனையை முறியடித்தார். பிராட்மேன் தான் ஒரு நாட்டுக்கு எதிராக சொந்த மண்ணில் அதிக சதம் அடித்த வீரராக இருந்தார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 8 சதம் அடித்து இருந்தார்.

    5. மான்செஸ்ட் மைதானத்தில் டெஸ்டில் 1000 ரன் எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    6. 2-க்கு மேற்பட்ட மைதானத்தில் 1000 ரன்னை எடுத்த 3-வது இங்கிலாந்து வீரர் ஆவார். கிரகாம் கூச், அலிஸ்டயர் குக் ஆகியோருடன் இணைந்தார். ஜோ ரூட் லார்ட்ஸ் மைதானத்தில் 2166 ரன்னும், மான்செஸ்ட் மைதானத்தில் 1128 ரன்னும் எடுத்துள்ளார்.

    7. 50 ரன்னுக்கு மேல் அவர் 104-வது முறையாக தொட்டார். காலிஸ், பாண்டிங்கை (இருவரும் தலா 103 தடவை) முந்தினார். டெண்டுல்கர் 119 முறையுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    8. ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஜேக் ஹோப்ஸ் சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார். ஹோபஸ் ஆஸ்திரேலியா விற்கு எதிராக 12 சதம் அடித்து இருந்தார்.

    9. ஜடேஜா பந்தில் ஜோ ரூட் 588 ரன்களை எடுத்து உள்ளார். இதன் மூலம் அவர் ஸ்டீவ் வாக்கை முந்தினார். ஸ்டீவ் வாக் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் 577 ரன்களை எடுத்து இருந்தார்.

    10. ஜோ ரூட் டெஸ்டில் சொந்த மண்ணில் 7195 ரன் எடுத்துள்ளார். இதன் மூலம் ஜெயவர்த்தனேவை முந்தினார். இலங்கையை சேர்ந்த அவர் சொந்த நாட்டில் 7167 ரன் எடுத்து உள்ளார். பாண்டிங் (ஆஸ்திரேலியாவில் 7578 ரன்), டெண்டுல்கர் (இந்தியாவில் 7216 ரன்) ஆகியோருக்கு அடுத்தபடியாக ஜோ ரூட் உள்ளார்.

    Next Story
    ×