என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மும்பை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா டெல்லி: 13-வது லீக் போட்டியில் இன்று மோதல்
- மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 3-ல் தோல்வியும் அடைந்துள்ளது.
- டெல்லி அணி 4 போட்டிகளில் 1 வெற்றி 3 தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது.
5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் நவி மும்பையில் நடந்தன. இந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பிறகு எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் குஜராத் மாநிலம் வதோதராவில் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில், இன்று நடைபெற உள்ள 13-வது ஆட்டத்தில் டெல்லி - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.
மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 3-ல் தோல்வியும் அடைந்து புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 4 போட்டிகளில் 1 வெற்றி 3 தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது.
Next Story






