என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சொந்த மண்ணில் மோசமான சாதனை படைத்த ஆஸ்திரேலியா
    X

    சொந்த மண்ணில் மோசமான சாதனை படைத்த ஆஸ்திரேலியா

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா 198, 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
    • பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா 163, 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ளது. அந்த 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2 - 0 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரை கைப்பற்றியுள்ளது.

    இதன்மூலம் கடைசியாக பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய 3 அணிகளுக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடர்களிலும் ஆஸ்திரேலியா தோற்றுள்ளது. குறிப்பாக தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 2 தொடர்களிலும் ஆஸ்திரேலியா தோற்றுள்ளது.

    அதிலும் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா முறையே 163, 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதைத் தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா முறையே 198, 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

    அந்த வகையில் தங்களுடைய சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 4 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா முறையே 163, 140, 198, 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

    இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 4 தொடர்ச்சியான போட்டிகளில் 200 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகியுள்ளது.

    இதற்கு முன் தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா ஒருமுறை கூட தொடர்ச்சியாக 3 முறைக்கு மேலே 200 ரன்களுக்குள் ஆல் அவுட்டானத்தில்லை. ஆனால் தற்போது முதல் முறையாக தொடர்ச்சியாக 4 போட்டிகளில் 200 ரன்களை கூட தாண்டாத ஆஸ்திரேலியா வரலாறு காணாத மோசமான சாதனை படைத்துள்ளது.

    Next Story
    ×