என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 அணிகள் பங்கேற்பு: ஐசிசி அறிவிப்பு
    X

    2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 அணிகள் பங்கேற்பு: ஐசிசி அறிவிப்பு

    • 128 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுகிறது.
    • ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளில் 6 நாடுகள் இடம் பெறும்.

    2028 ஒலிம்பிக் தொடர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட் இடம்பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சார்பில் தலா 6 அணிகள் பங்கேற்கும். இந்த 6 அணிகளும் புள்ளிகள் தரவரிசையில் பட்டியலில் இருந்து தேர்வாகும் என முதலில் தகவல் வெளியானது. தற்போது ஒரு கண்டத்திற்கு ஒரு அணி என்ற வகையில் 6 அணிகள் தேர்வு செய்ய ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    போட்டிகள் 2028ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என மொத்தமாக 29 போட்டிகள் நடைபெறும். பெண்களுக்கான பதக்கம் போட்டிகள் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். ஆண்களுக்கான பதக்கம் போட்டிகள் ஜூலை 29ஆம் தேதி நடைபெறும். போட்டிகள் அனைத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள பொமோனாவில் நடைபெறுகிறது.

    இதற்கு முன்னதாக 1900-ல் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பிடித்திருந்தது. அதில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து தங்கப்பதக்கம் வென்றது. அதன்பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் தடை செய்யப்பட்டது. 128 வருடங்கள் கழித்து மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பிடித்துள்ளது.

    Next Story
    ×