என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சர்ச்சையை ஏற்படுத்திய சல்மான் ஆகாவின் ரன்-அவுட்: வீடியோ
    X

    சர்ச்சையை ஏற்படுத்திய சல்மான் ஆகாவின் ரன்-அவுட்: வீடியோ

    • கிரீஸ்க்கு வெளியில் நின்ற போது பந்து வீச்சாளருடன் மோதும் நிலை ஏற்பட்டது.
    • அதை தவிர்க்க அப்படியே வெளியே நின்று விட்டதால் ரன்அவுட் செய்யப்பட்டார்.

    பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. முதல் போட்டியில் வங்கதேசம் எளிதாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2-வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

    முகமது ரிஸ்வான், சல்மான் ஆகா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். 39-வது ஓவரை மிராஸ் வீசினார். ரிஸ்வான் பந்தை தடுத்து ஆடினார். அப்போது பந்து மிராஸை நோக்கி வந்தது. அப்போது எதிர்முனையில் இருந்த சல்மான் ஆகாவும் மிராஸும் மோதிக் கொள்வது போன்ற நிலை ஏற்பட்டது.

    இதனால் சல்மான் ஆகா கிரீஸ்க்கு வெளியில் அப்படியே நின்று விட்டார். மிராஸும் நின்று விட்டார். உடனே சல்மான் ஆகா பந்தை எடுத்து மிராஸிடம் கொடுப்பதற்காக கீழே குனிந்து பந்தை எடுக்க முயன்றார். அதற்குள் மிராஸ் பந்தை எடுத்து ரன்அவுட் செய்துவிடுவார்.

    வங்கதேச வீரர்கள் ரன்அவுட்டுக்கு அப்பீல் செய்வார். நடுவரும் அவுட் கொடுத்துவிடுவார். இதனால் சல்மான் ஆகா முகுந்த கோபத்துடன் வெளியேறுவார். இந்த ரன்அவுட் சர்ச்சையை எழுப்பியது. அதேவேளையில் வங்கதேச கிரிக்கெட் போர்டு அட்டகாசமான ரன்அவுட் எனக் குறிப்பிட்டுள்ளது.

    Next Story
    ×