என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பார்டர் கவாஸ்கர் சாதனையை முறியடித்த ஆஷஸ் தொடர்
- ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
- ஆஷஸ் தொடரில் மொத்தமாக 8 லட்சத்து 59 ஆயிரத்து 580 பேர் வருகை தந்துள்ளனர்.
சிட்னி:
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 384 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 567 ரன் குவித்தது. 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 88. 2 ஓவரில் 342 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 160 ரன்கள் இலக்காக இருந்தது.
168 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. ஆஸ்திரேலியா 31.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏற்கனவே முதல் 3 டெஸ்டில் வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்தது. 4-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் மொத்தமாக 8 லட்சத்து 59 ஆயிரத்து 580 பேர் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் கவாஸ்கர் தொடரில் மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 879 பேர் வருகை தந்துள்ள நிலையில் அந்த வருகை சாதனையை இந்த ஆண்டு ஆஷஸ் தொடர் முறியடித்துள்ளது.






