என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்திய அணி மீது வன்மத்தை காட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்.. வைரலாகும் வீடியோ
    X

    இந்திய அணி மீது வன்மத்தை காட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்.. வைரலாகும் வீடியோ

    • ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்தனர்.
    • இந்த நிகழ்வை கிண்டல் செய்யும் வகையில் ஆஸ்திரேலியா வீரர்கள் சைகை காட்டினர்.

    சிட்னி:

    இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் தொடர் வரும் அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரை முன்னிட்டு, ஆஸ்திரேலியாவின் 'காயோ ஸ்போர்ட்ஸ்' என்ற ஓடிடி தளம், ஒரு விளம்பர வீடியோவை வெளியிட்டது.

    சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில், பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்ததாகக் கூறப்படும் ஒரு நிகழ்வை கிண்டல் செய்யும் விதமாக இந்த வீடியோ அமைந்திருந்தது.

    அந்த வீடியோவில், வர்ணனையாளர் இயன் ஹிக்கின்ஸ், இந்திய வீரர்களின் "மிகப்பெரிய பலவீனம்" என்று கூறி, கை குலுக்காத விஷயத்தைக் குறிப்பிடுகிறார். அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீரர்களான ஜோஷ் ஹேசில்வுட், மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், அலிசா ஹீலி, அலானா கிங் மற்றும் சோஃபி மோலினக்ஸ் ஆகியோர், கை குலுக்கலுக்குப் பதிலாக என்னென்ன 'வாழ்த்துக்களை' தெரிவிக்கலாம் என்று தங்களது பாணியில் செய்து காட்டுகின்றனர்.

    அப்போது ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனை சோஃபி மோலினக்ஸ், தனது இரண்டு நடுவிரல்களையும் கேமராவை நோக்கிக் காட்டி, 'bras d'honneur' எனப்படும் இத்தாலிய சைகையையும் செய்தார். இது மிக மோசமான சைகையாகும்.

    மற்றொரு வீரரான ஜோஷ் ஹேசில்வுட், துப்பாக்கியால் சுடுவது போன்ற சைகையைச் செய்தது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிளென் மேக்ஸ்வெல், ஆலிசா ஹீலி. மிட்செல் மார்ஷ் போன்ற மற்ற வீரர்கள் தங்கள் பங்குக்கு கேலி செய்யும் வகையில் சில சைகைகளை செய்து இப்படிதான் இந்திய அணிக்கு கைகுலுக்காமல் வித்தியாசமான வரவேற்பை அளிக்கலாம் என கூறினர்.

    இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே, இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பொங்கி எழுந்தனர். ஆஸ்திரேலிய வீரர்களின் இந்தச் செயலைக் கடுமையாகக் கண்டித்து, தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

    இதுதான் ஆஸ்திரேலியர்களின் குணம். அவர்களிடம் இருக்கும் திமிரான மனநிலையை இது காட்டுகிறது என ரசிகர்கள் பதிவிட்டனர்.

    இந்திய ரசிகர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, 'காயோ ஸ்போர்ட்ஸ்' தளம், அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை சமூக வலைதளப் பக்கங்களிலிருந்தும் உடனடியாக நீக்கியது.

    Next Story
    ×