என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஷாகிப் அல் ஹசனை மீண்டும் அழைக்க வங்கதேச கிரிக்கெட் போர்டு முயற்சி
    X

    ஷாகிப் அல் ஹசனை மீண்டும் அழைக்க வங்கதேச கிரிக்கெட் போர்டு முயற்சி

    • சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியுடன் ஓய்வு பெற திட்டம்.
    • ஆட்சிக் கவிழ்ப்பால் வங்கதேசம் செல்ல முடியாத நிலை ஷாகிப் அல் ஹசனுக்கு ஏற்பட்டது.

    வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருந்தவர் ஷாகிப் அல் ஹசன். ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததும், இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதனால் பாதுகாப்பு அச்சம் காரணமாக வங்தேசத்தில் இருந்து வெளியேறினார். தற்போது அவர் வெளிநாட்டில் வசித்து வருகிறது.

    இந்த நிலையில் அவரை மீண்டும் அணியில் சேர்க்க வங்கதேச கிரிக்கெட் போர்டு திட்டமிட்டுள்ளது. இதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் ஒருமித்த கருத்தோடு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    ஒருவேளை இது வெற்றி பெற்றால், ஷாகி அல் ஹசன் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என்று அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் முகமது அஷ்ரபுல் வலியுறுத்தியுள்ளார்.

    பாகிஸ்தான் அணி மார்ச் மாதம் வங்கதேசம் சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்னதாக ஷாகிப் அல் ஹசனை அணிக்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல வெளியாகியுள்ளது.

    நாங்கள் ஷகிப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம், அவரும் விளையாட ஆர்வமாக இருக்கிறார். எங்கள் திட்டப்படி எல்லாம் நடந்தால், பாகிஸ்தானுக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கு முன்பே அவரை மீண்டும் அணிக்குக் கொண்டுவர முடியும் என்று நம்புகிறோம் என பிசிபி டைரக்டர் ஆசிப் அக்பர் தெரிவித்துள்ளார்.

    ஷாகிப் அல் ஹசன் வங்கதேசத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் பாதுகாப்பு காரணமாக அவர் வங்கதேசம் செல்லவில்லை. சொந்த மண்ணில் விளையாடிய பிறகு ஓய்வு பெற ஷாகிப் அல் ஹசன் விரும்புகிறார்.

    Next Story
    ×