என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3 சதங்கள்: அன்னாபெல் சதர்லேண்ட் சாதனை #Annabel
    X

    டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3 சதங்கள்: அன்னாபெல் சதர்லேண்ட் சாதனை #Annabel

    • முதலில் பேட் செய்த இந்திய மகளிரணி 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 323 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பெர்த்:

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரை 3-0 ஆஸ்திரேலியா வென்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய மகளிரணி 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜெமிமா ரோட்ரிகஸ் அரை சதம் அடித்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை. கடைசி கட்டத்தில் பவுலர் கஷ்வீ கவுதம் 34 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 4 விக்கெட்டும், லூசி ஹாமில்டன் 3, டார்சி புரவுன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90.4 ஓவரில் 323 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆஸ்திரேலிய அணி 125 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் அன்னாபெல் சதர்லேண்ட் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3 சதங்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

    Next Story
    ×