என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    WPL Auction 2026: 6 முறை சாம்பியனான அலிசா ஹீலி Unsold
    X

    WPL Auction 2026: 6 முறை சாம்பியனான அலிசா ஹீலி Unsold

    • ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
    • இவர்களில் இருந்து 23 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 73 பேர் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள்.

    புதுடெல்லி:

    5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு டெல்லியில் நடக்கிறது.

    ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து 23 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 73 பேர் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள். ஒரு அணியில் குறைந்தது 15, அதிகபட்சமாக 18 வீராங்கனைகள் இருக்கலாம்.

    இந்நிலையில் இந்த தொடருக்கான ஏலத்தில் நட்சத்திர ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலியை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.

    ஜாம்பவான் வீராங்கனையான அவரை எந்த அணியும் ஏலம் எடுக்காதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அலிசா ஹீலி தலைமையில் ஆஸ்திரேலிய அணி ஆறு முறை உலகக் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×