என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மாஸ் காட்டும் மார்க்கிராம்: கேப்டன்களின் எலைட் லிஸ்டில் இடம்..!
    X

    மாஸ் காட்டும் மார்க்கிராம்: கேப்டன்களின் எலைட் லிஸ்டில் இடம்..!

    • 2021-ல் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 303 ரன்கள் குவித்துள்ளார்.
    • 2024-ல் ரோகித் சர்மா 257 ரன்கள் அடித்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பையில் தென்ஆப்பிரிக்கா அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குரூப் சுற்றில் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. சூப்பர் 8 சுற்றில் 3-ல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே உடன் மட்டும் மோத வேண்டியுள்ளது.

    அந்த அணியின் கேப்டனும், தொடக்க பேட்ஸ்மேனுமான மார்க்கிராம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 6 போட்டிகளில் 4 அரைசதத்துடன் 264 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்துள்ளார்.

    இதன்மூலம் கேப்டனாக ஒரு தொடரில் 250 ரன்களை தாண்டி முத்திரை பதித்துள்ளார். இதற்கு முன்னதாக 2021-ல் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 303 ரன்கள் குவித்துள்ளார். 2024-ல் ரோகித் சர்மா 257 ரன்கள் அடித்துள்ளார். தற்போது மார்க்கிராம் 264 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் இரண்டு போட்டிகள் உறுதியாக உள்ளன. அரையிறுதியில் வெற்றி பெற்றால், இறுதிப் போட்டி வாய்ப்பு உள்ளது. இதனால் பாபர் அசாம் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

    Next Story
    ×