முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆப் செய்த ஆப்கானிஸ்தான்

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 181 ரன்கள் எடுத்தது.அதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.
முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆப் செய்த ஆப்கானிஸ்தான்
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் டி20 தொடரில் விளையாடி வருகிறது.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த செடிக்குல்லா அடல் 2 ரன்னில் வெளியேறினார். இதனால் 19 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் திணறியது.

இதனையடுத்து இப்ராஹிம் சத்ரான்- தர்விஷ் ரசூலி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சத்ரான் 87 ரன்களும் ரசூல் 84 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக குவென்டின் சாம்ப்சன் 30 ரன்கள் எடுத்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com