என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20-யில் கேப்டனாக அதிக சதங்கள்- டூ பிளெசிஸ் உலக சாதனை
    X

    டி20-யில் கேப்டனாக அதிக சதங்கள்- டூ பிளெசிஸ் உலக சாதனை

    • மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டூ பிளெசிஸ் செயல்பட்டு வருகிறார்.
    • எம் ஐ நியூயார்க் அணிக்கு எதிராக டூ பிளெசிஸ் சதம் விளாசினார்.

    2025 மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - எம்ஐ நியார்க் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 223 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டூ பிளெசிஸ் 103 ரன்கள் குவித்தார். இதனையடுத்து களமிறங்கிய எம் ஐ நியூயார்க் அணி 184 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டூ பிளெசிஸ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    அதன்படி டி20 கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக அதிக (8) சதங்கள் அடித்த வீரர் என்ற புதிய மைல்கல்லை டூபிளெசிஸ் எட்டினார். 7 சதங்களுடன் முதலிடத்தில் இருந்த பாபர் அசாம் மற்றும் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளிங்கர் சாதனையை முறியடித்து இவர் அசத்தியுள்ளார்.

    Next Story
    ×