என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு
- இந்த தொடர் ஜூலை 2, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
- சரித் அசலங்கா தலைமையில் இலங்கை அணி களமிறங்க உள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் 3 வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சரித் அசலங்கா தலைமையில் இலங்கை அணி களமிறங்க உள்ளது.
இந்த தொடர் ஜூலை 2, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் கொழும்புவிலும் 3-வது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






