search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: சீனா- தென்கொரியா ஆட்டம் சமன் ஆனது
    X

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: சீனா- தென்கொரியா ஆட்டம் சமன் ஆனது

    • 4ம் நாளான இன்றும் மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
    • 7வது லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர்.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது.

    12ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.

    தொடக்க நாளில் மூன்று ஆட்டங்கள் நடந்தன. இதில், தென்கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், மலேசியா 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் தோற்கடித்தன. இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்தியா-சீனா அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

    2ம் நாளில், மூன்று லீக் ஆட்டங்கள் நடந்தன. முதலில் நடந்த தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமன் ஆனது.

    3ம் நாளான நேற்று ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், 4ம் நாளான இன்றும் மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    இதில், 4 மணிக்கு தொடங்கிய 7வது லீக் ஆட்டத்தில் சீனா- தென் கொரியா அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர். இதையடுத்து, இரு அணிகளும் கோல் அடிக்காததால், ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமன் ஆனது.

    Next Story
    ×