என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டி20 உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு
    X

    டி20 உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு

    • ஆஸ்திரேலிய அணியில் ஆல் ரவுண்டர் கூப்பர் கனோலி இடம்பெற்றுள்ளார்.
    • மிச்சேல் ஓவன், பென் டுவார்சியஸ் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்தப் போட்டிக்கான இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஓமன் ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலிய அணியில் ஆல் ரவுண்டர் கூப்பர் கனோலி இடம்பெற்றுள்ளார். இடது கை பேட்ஸ்மேனான அவர் இடதுகை சுழற்பந்து வீரர் ஆவார். பிக் பாஷ் லீக் போட்டியில் அவரது ஸ்டிரைக் ரேட் 166.66 ஆக இருந்தது.

    மிச்சேல் ஓவன், பென் டுவார்சியஸ் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    காயத்தில் இருந்து குணம் அடைந்த கம்மின்ஸ், ஹேசல் வுட், டிம் டேவிட் ஆகியோரும் அணியில் இடம்பெற்று உள்ளனர்.

    ஆஸ்திரேலியா அணி

    மிச்சேல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கனோலி, கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மாட் குனெமன், மேக்ஸ் வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா.

    Next Story
    ×