search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா வெற்றியுடன் தொடங்குமா? சீனாவுடன் பலப்பரீட்சை
    X

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா வெற்றியுடன் தொடங்குமா? சீனாவுடன் பலப்பரீட்சை

    • லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
    • முன்னதாக இன்று மாலை 4 மணிக்கு நடை பெறும் முதல் ஆட்டத்தில் தென்கொரியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக் கிழமை) தொடங்குகிறது. வருகிற 12-ந் தேதி வரை ஹாக்கி திருவிழா நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான் சீனா, ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவை எதிர் கொள்கிறது. இரவு 8.30 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.

    ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலத்துடன் திகழ்கிறது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்திய அணி பலம் வாய்ந்தது. இரு அணிகள் மோதிய 7 போட்டியில் இந்தியா 6-ல் வெற்றி பெற்றது.

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-வது முறை யாக வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது. 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்று இருந்தது.

    முன்னதாக இன்று மாலை 4 மணிக்கு நடை பெறும் முதல் ஆட்டத்தில் தென்கொரியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான தென் கொரியா வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    மாலை 6.15 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் 3 முறை சாம் பியனான பாகிஸ்தான்-மலேசியா அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் தொடக்க ஆட்டத்திலேயே வெற்றி பெற போராடும். இதனால் இந்தப் போட்டி விறு விறுப்பாக இருக்கும்.

    16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    கடைசியாக 2007-ம் ஆண்டு சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×