search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    மாமல்லபுரத்தில் சர்வதேச ‘செஸ்’ ஒலிம்பியாட் போட்டி- தமிழக அரசு மேலும் ரூ.10 கோடி ஒதுக்கியது

    செஸ் ஒலிம்பியாட் தொடர் வரலாற்றிலேயே அதிக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பியாட் தொடராக மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் அமைந்துள்ளது.
    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    உலகளவில் செஸ் போட்டியில் சிறந்து விளங்கக்கூடிய முன்னணி வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியை மிக பிரமாண்டமான முறையில் நடத்திட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

    இந்த செஸ், ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுள்ளது. அது மட்டுமின்றி மாமல்லபுரம் வரும் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கும் அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்க உள்ளது.

    இதற்காக தமிழக அரசு ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து பணிகளை துவங்கி உள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92 கோடியை தமிழக அரசு ஏற்கனவே ஒதுக்கி இருந்தது.

    இப்போது போட்டிக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள மேலும் ரூ.10 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் தொடர் வரலாற்றிலேயே அதிக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பியாட் தொடராக மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் அமைந்துள்ளது.


    Next Story
    ×