search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இறுதிப்போட்டியில் நவோமி-ஸ்வியாடெக் மோதல்
    X
    இறுதிப்போட்டியில் நவோமி-ஸ்வியாடெக் மோதல்

    மியாமி ஓபன் டென்னிஸ்: இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் நவோமி-ஸ்வியாடெக் மோதல்

    மியாமி ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா-ஸ்வியாடெக் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    மியாமி:

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியனான பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

    இந்த ஆட்டம் 2 மணி 6 நிமிடம் நீடித்தது. மற்றொரு அரைஇறுதியில் புதிதாக நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-2, 7-5 என்ற நேர்செட்டில் ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) விரட்டியடித்து இறுதிசுற்றை எட்டினார். இறுதிப்போட்டியில் ஒசாகா-ஸ்வியாடெக் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள டேனில் மெட்விடேவ் (ரஷியா) 6-7 (7-9), 3-6 என்ற நேர்செட்டில் 10-ம் நிலை வீரரான ஹூபெர்ட் ஹூர்காச்சிடம் (போலந்து) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த தொடரில் அரைஇறுதியை எட்டினால் ஜோகோவிச்சை (செர்பியா) பின்னுக்கு தள்ளி மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க முடியும் என்ற நிலையில் இருந்த மெட்விடேவ் இந்த தோல்வியின் மூலம் அந்த பொன்னான வாய்ப்பை நழுவவிட்டார்.

    Next Story
    ×