search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஸ்டீபன் பிளேமிங்
    X
    ஸ்டீபன் பிளேமிங்

    நயாகரா நீர் வீழ்ச்சி போல் மைதானம் இருந்தது: ஸ்டீபன் பிளெமிங்

    லக்னோ அணியுடன் ஏற்பட்ட தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் 210 ரன்கள் எடுத்தும் தோல்வியை சந்தித்தது. சிவம் துபே வீசிய 19-வது ஓவரில் 25 ரன்கள் விளாசி 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. 

    மைதானத்தின் மேற்பரப்பை நயாகரா வீழ்ச்சியுடன் ஒப்பிட்டு சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:-

    போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஓவர்கள் போதிய அளவில் தரப்படவில்லை. பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுழற்பந்து வீச்சாளர்கள் நினைத்தப்படி பந்தை திருப்ப முடியவில்லை. ஏனென்றால் மைதானத்தில் ஈரத்தன்மை நயாகரா நீர் வீழ்ச்சி போல் இருந்தது. லக்னோ அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். 

    சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜா மற்றும் மொயின் அலி மொத்தமாகவே 3 ஓவர்கள் மட்டுமே வீசினர். நாங்கள் முக்கிய பந்து வீச்சாளர்களை வைத்து இக்கட்டான சூழலை உருவாக்கினோம். ஆனால் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு ஓவர் ஆட்டத்தை மாற்றும் என நாங்கள் நினைத்தோம். கடைசியில் லக்னோ அணியினர் சிவன் துபே வீசிய 19-வது ஓவரை அதிரடியாகி விளையாடி ரன்களை குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 

    எங்கள் அணியில் இளம் வீரரான முகேஷ் முதல் போட்டியில் களமிறங்கினார். தேஷ்பாண்டே சில போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருந்தது. இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என நினைத்தேன். அது கடிமானகவே இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×