search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சென்னை ரசிகர்கள்
    X
    சென்னை ரசிகர்கள்

    டு பிளிஸ்சிஸ்-க்காக வந்த சென்னை ரசிகர்கள்- நேற்றைய போட்டியில் நடந்த சம்பவங்கள் ஒரு அலசல்

    கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 மெய்டன் வீசியதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் 2 மெய்டன் வீசிய இரண்டாவது பவுலர் என்ற சாதனையை ஹர்ஷல் படேல் படைத்துள்ளார்.
    பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. கொல்கத்தா அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து இந்த போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

    நேற்றைய போட்டியில் சில சுவாரஷ்யமான சம்பவங்களும் வீரர்களின் சாதனைகளும் அரங்கேறி உள்ளது. 

    சென்னை ரசிகர்களின் பாசத்தை காட்டும் விதமாக நேற்றைய போட்டியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களூர்-கொல்கத்தா போட்டியில் சென்னை ரசிகர்கள் காட்சி அளித்தனர். 

    சென்னை ரசிகர்கள் வைத்திருந்த பேனர்

    அவர்கள் ஒரு பேனரை கையில் ஏந்தி வைத்திருந்தனர். அதில் நாங்கள் சென்னை ரசிகர்கள் ஆனால் பாப் டு பிளிஸ்சிஸ்-க்காக வந்திருக்கிறோம் என எழுத்தப்பட்டிருந்தது. இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மேலும் பெங்களூர் அணி ரசிகர் ஒருவர் நாளை தேர்வு உள்ள நிலையில் விராட் கோலியை பார்ப்பதற்காக வந்திருந்தார். அவர் கையில் ஒரு பேனரை வைத்திருந்தார். 

    பெங்களூர் ரசிகர்

    அதில் நாளை எனக்கு தேர்வு ஆனால் கிங் கோலி பார்ப்பதுதான் முக்கியம் என எழுத்தப்பட்டிருந்தது. இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்களில் 2 மெய்டனுடன் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    ஹர்சல் படேல் - சிராஜ்

    ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் 2 மெய்டன் வீசிய இரண்டாவது பவுலர் ஹர்ஷல் ஆவார். இதற்கு முன்பு 2020-ம் ஆண்டு பெங்களூரு அணியின் முகமது சிராஜ் இதே கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 மெய்டன் வீசியிருந்தார்.

    2 போட்டியில் விளையாடிய பெங்களூர் அணி கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 4 சிக்சர் 7 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் எடுத்துள்ளார். அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் பாப் முதல் இடத்தில் உள்ளதையடுத்து அவரிடம் ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டது. 

    ஹசரங்கா - டு பிளிஸ்சிஸ்

    அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் இதே அணியை சேர்ந்த ஹசரங்கா 5 விக்கெட்டுகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதனையடுத்து அவரிடம் பர்பில் நிற தொப்பி வழங்கப்பட்டது.

    Next Story
    ×