என் மலர்
விளையாட்டு

பவானி தேவி, வினோத்
தேசிய வாள்வீச்சில் பவானி தேவி, வினோத்துக்கு தங்கம், வெண்கல பதக்கம்
நாடு முழுவதிலும் இருந்து 700 வீரர்கள்- வீராங்கனைகள் பங்கேற்றதில் தமிழகத்தின் பவானி தேவி, வினோத் தங்கப் பதக்கம் வென்றனர்.
32-வது தேசிய சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குருநானக் பல்கலைக் கழகத்தில் கடந்த 3 தினங்களாக நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் தமிழக அணிக்கு 2 பதக்கம் கிடைத்தது. சென்னையை சேர்ந்த சர்வதேச வீராங்கனை பவானி தேவி சேபர் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். ஆண்கள் பாயில் தனிநபர் பிரிவில் வினோத் குமாருக்கு வெண்கலம் கிடைத்தது.
Next Story






