என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஜெய்ப்பூர் -  யு மும்பா அணி வீரர்கள்
    X
    ஜெய்ப்பூர் - யு மும்பா அணி வீரர்கள்

    புரோ கபடி லீக் : ஜெய்ப்பூர், பாட்னா அணிகள் வெற்றி

    மற்றொரு ஆட்டத்தில் புனேரி பல்டன் அணி 41-31 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வென்றது
    பெங்களூரு:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.  நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில்  ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி,  யு மும்பா அணியை 44-28 என்ற கணக்கில் வென்றது. இதன் மூலம் அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸின் கடுமையான சவாலை முறியடித்த பாட்னா பைரேட்ஸ் அணி 36-34 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 

    நேற்று இரவு நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில்  புனேரி பல்டன் அணி  41-31 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வென்றது. இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு முடிவுக்கு வந்தது.

    Next Story
    ×