search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரிஷப் பண்ட் - ஸ்ரேயாஸ் அய்யர்
    X
    ரிஷப் பண்ட் - ஸ்ரேயாஸ் அய்யர்

    ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 266 ரன்கள் வெற்றி இலக்கு

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்து அசத்தினார்.
    அகமதாபாத்:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - தவான் களமிறங்கினர்.

    இந்திய அணிக்கு தொடக்கமே சொதப்பலாகவே அமைந்தது. ரோகித் சர்மா 13, தவான் 10, விராட் கோலி 0 என அடுத்தடுத்து வெளியேறினர். 42 ரன்கள் எடுப்பதற்குள்ளயே 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இதனையடுத்து ஸ்ரேயாஸ் அய்யர்-ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர்-ரிஷப் பண்ட் அரை சதம் அடித்து அசத்தினர். அரை சதம் அடித்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாட முயற்சித்த நிலையில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (6) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்த சிறிது நேரத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் 80 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    இந்திய அணி 187 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தருடன்-தீபக் சாஹர் ஜோடி சேர்ந்தார். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை எளிதாக எதிர் கொண்டு ஆடினர். குறிப்பாக தீபக் சாஹர் அதிரடியாக விளையாடினார். 4 பவுண்டரி 2 சிக்சர் விளாசிய அவர் 38 ரன்கள் எடுத்த நிலையிலும் வாஷிங்டன் சுந்தர் 33 ரன்கள் எடுத்த நிலையிலும் ஹோல்டர் பந்து வீச்சில் வெளியேறினார். 7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர்-தீபக் சாஹர் ஜோடி 53 ரன்கள் சேர்ந்தனர்.

    50 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும் அல்ஜாரி ஜோசப், வால்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    Next Story
    ×