என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல்
    X
    ஐபிஎல்

    அகமதாபாத் அணியின் பெயர் வெளியானது

    அகமதாபாத் அணி ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது. ரஷித் கான், ஷுப்மான் கில் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
    ஐ.பி.எல். 15-வது தொடரில் அகமதாபாத், லக்னோ ஆகிய புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    இதில், லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டார். மேலும், ரவி பிஷ்னோய், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோரையும் வாங்கியது. அந்த அணிக்கு லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் என பெயர் வைத்துள்ளது. 

    இந்நிலையில், மற்றொரு அணியான அகமதாபாத், தனது அணியின் பெயரை குஜராத் டைடன்ஸ் என பெயர் வைத்துள்ளது. ரசிகர்கள் இந்த பெயருக்கு வரவேற்பை தெரிவித்து வருகின்றனர். 

    நடப்பு ஆண்டு ஐ.பி.எல். மெகா ஏலம் வரும் 12,13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×