என் மலர்
விளையாட்டு

போபண்ணா, ராம்குமார் ஜோடி
மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் - இந்தியாவின் போபண்ணா, ராம்குமார் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது
மகாராஷ்டிரா ஓபன் டென்னிசி சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் இந்தியாவின் போபண்ணா, ராம்குமார் ஜோடி தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
புனே:
மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டிகள் பலேவாடி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. இதில், ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் லூக் சாவில்லே மற்றும் ஜான் பேட்ரிக் ஆகியோரை எதிர்த்து விளையாடினர்.
முதல் செட்டில் இந்திய ஜோடி தோற்றாலும், அடுத்த இரு செட்களை அதிரடியாக ஆடி வென்றது.
இந்த இறுதிப்போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 44 நிமிடங்கள் நீடித்தது. இதில், 6-7, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்.
இதையும் படியுங்கள்...ஜூனியர் உலக கோப்பையை 5வது முறை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரொக்கப் பரிசு
Next Story






