என் மலர்tooltip icon

    விளையாட்டு

    எதிரணி வீரரை மடக்கும் டெல்லி வீரர்கள்
    X
    எதிரணி வீரரை மடக்கும் டெல்லி வீரர்கள்

    புரோ கபடி லீகில் டெல்லி அணி வெற்றி - புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம்

    புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் தபாங் டெல்லி அணி 7 வெற்றி, 2 தோல்வி, 2 டிரா என மொத்தம் 42 புள்ளிகள் எடுத்து முதல் இடம் பிடித்துள்ளது.
    பெங்களூரு:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

    இதில் நேற்றிரவு நடந்த முதல் போட்டியில் தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பம் முதலே டெல்லி அணி சிறப்பாக விளையாடியது. இதனால் டெல்லி அணி 32- 29 என்ற புள்ளிக்கணக்கில் 7வது வெற்றியைப் பதிவு செய்தது.

    இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் பாட்னா அணி 2-ம் இடத்தில் உள்ளது.

    மற்றொரு போட்டியில் யு மும்பா, குஜராத் ஜெயண்டஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டி 24 - 24 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் யு மும்பா அணி 6ம் இடத்துக்கு முன்னேறியது.
    Next Story
    ×