என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கிடாம்பி ஸ்ரீகாந்த்
    X
    கிடாம்பி ஸ்ரீகாந்த்

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தார் ஸ்ரீகாந்த்

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் வெண்கலப் பதக்கம் வென்றார்.
    வெல்வா:

    26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் இந்தியாவின் ஸ்ரீகாந்த் சக நாட்டவரான 19-ம் நிலை வீரர் லக்‌ஷயா சென்னுடன் மோதினார். 

    முதல் செட்டை இழந்த ஸ்ரீகாந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இரண்டு, மூன்றாவது செட்களைக் கைப்பற்றினார். 

    இதில் ஸ்ரீகாந்த் 17-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென்னை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஸ்ரீகாந்த் இந்த வெற்றியைப் பெற ஒரு மணி நேரம் ஒன்பது நிமிடங்கள் தேவைப்பட்டது.

    Next Story
    ×