என் மலர்

  செய்திகள்

  ஜடேஜா, டோனி
  X
  ஜடேஜா, டோனி

  ஜடேஜாவை தக்க வைக்க சி.எஸ்.கே. செலவழித்தது இவ்வளவா..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுரேஷ் ரெய்னா, தீபக் சாஹர், டு பிளிஸ்சிஸ் உள்ளிட்ட வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், வீரர்கள் ஏலம் புதிதாக நடைபெற இருக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் முதலில் இருந்து ஏலம் விடப்பட இருக்கிறார்கள். ஏற்கனவே உள்ள 8 அணிகள் தலா நான்கு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

  அந்த வகையில் நடப்பு சாம்பியன் சி.எஸ்.கே. (சென்னை சூப்பர் கிங்ஸ்) தல டோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயீன் அலி ஆகியோரை தக்கவைத்துள்ளது.

  இதில் ஜடேஜாவை 16 கோடி ரூபாய் கொடுத்தும், டோனியை 12 கோடி ரூபாய் கொடுத்தும், மொயீன் அலியை 8 கோடி ரூபாய் கொடுத்தும், ருதுராஜன் கெய்க்வாட்டை 6 கோடி ரூபாய் கொடுத்தும் தக்கவைத்துள்ளது.

  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேன் வில்லியம்சன் (14 கோடி ரூபாய்), அப்துல் சமாத் (4 கோடி ரூபாய்), உம்ரான் மாலிக் (4 கோடி ரூபாய்) ஆகியோரை தக்கவதை்துள்ளது.

  பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வாலை 12 கோடி ரூபாய் கொடுத்தும், அர்ஷ்தீப் சிங்கை 4 கோடி ரூபாய் கொடுத்தும் தக்கவைத்துள்ளது.

  டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரிஷாப் பண்ட்-ஐ 16 கோடி ரூபாய் கொடுத்தும், அக்சார் பட்டேலை 9 கோடி ரூபாய் கொடுத்தும், பிரித்வி ஷாவை 7.5 கோடி ரூபாய் கொடுத்தும், அன்ரிச் நோர்ஜோவை 6.5 கோடி ரூபாய் கொடுத்தும் தக்கவைத்துள்ளது.

  கொல்கத்தா அணியில் சக்ரவர்த்தி (8 கோடி ரூபாய்), ரஸல் (12 கோடி ரூபாய்), வெங்கடேஷ் அய்யர் (8 கோடி ரூபாய்), சுனில் நரைன் (6 கோடி ரூபாய்) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
  Next Story
  ×