என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்திக் பாண்டியா
    X
    ஹர்திக் பாண்டியா

    ஹர்திக் பாண்டியாவின் ரூ.5 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் பறிமுதல்

    இரண்டு கைக்கடிகாரங்களும், துபாயில் இருந்து வாங்கிய பட்சத்தில் அவற்றிற்கான ரசீது எதுவும் பாண்டியாவிடம் இல்லை என்பது சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது, ஹர்திக் பாண்டியாவின் கையில் ஒரு கைக்கடிகாரம் கட்டப்பட்டும், பையில் ஒரு கைக்கடிகாரமும் இருந்துள்ளது.

    இவை இரண்டும் புதிய கைக்கடிகாரங்கள் என்றும், இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி என்றும் அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இரண்டு கைக்கடிகாரங்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இந்த இரண்டு கைக்கடிகாரங்களும் துபாயில் இருந்து வாங்கிய பட்சத்தில், அவற்றிற்கான ரசீது எதுவும் அவரிடம் இல்லை என்பதால், ஹர்திக் பாண்டியா மீது சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது.


    Next Story
    ×