என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: இரண்டு முக்கிய வீரர்களுக்கு ஓய்வு

    கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரோகித் சர்மா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    டி20 உலக கோப்பை முடிந்த கையோடு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி 17-ந்தேதியும் (ஜெய்ப்பூர்), 2-வது போட்டி 19-ந்தேதியும் (ராஞ்சி), 3-வது மற்றும் கடைசி போட்டி 21-ந்தேதியும் (கொல்கத்தா) நடக்கிறது.

    நியூசிலாந்து தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மாவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    விராட் கோலி

    நியூசிலாந்து தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி விவரம்:-

    1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. கே.எல். ராகுல் (துணைக்கேப்டன்), 3. ருத்துராஜ் கெய்க்வாட், 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. சூர்யகுமார் யாதவ், 6. ரிஷாப் பண்ட், 7. இஷான் கிஷன், 8. வெங்கடேஷ் அய்யர், 9. சாஹல், 10. ஆர். அஸவின், 11. அக்சார் பட்டேல், 12. புவனேஷ்வர் குமார், 13. தீபக் சாஹர், 14. ஹர்ஷல் பட்டேல், 15. முகமது சிராஜ். 16. அவேஷ் கான்.
    Next Story
    ×