என் மலர்

  செய்திகள்

  பிஞ்ச் - பவுமா
  X
  பிஞ்ச் - பவுமா

  டி20 உலக கோப்பையில் இன்று 2 ஆட்டங்கள் - அரைஇறுதிக்கு முன்னேறுவது ஆஸ்திரேலியாவா? தென் ஆப்பிரிக்காவா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி20 உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணிகள் வெற்றி பெற்றால், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

  அபுதாபி:

  20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

  இந்த போட்டியில் விளையாடும் 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன், ஒரு முறை மோத வேண்டும். 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெறும்.

  இதுவரை குரூப்-2 பிரிவில் இருந்து பாகிஸ்தான் மட்டுமே அரை இறுதிக்கு தகுதிபெற்று உள்ளது. இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. இதில் குரூப்-1 பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் (மாலை 3.30), இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா (இரவு 7.30) அணிகள் மோதுகின்றன.

  இந்த பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினால் 10 புள்ளியுடன் முதல் இடத்தை பிடித்து அரை இறுதிக்கு தகுதிபெறும்.

  ஒருவேளை அந்த அணி தென்ஆப்பிரிக்காவிடம் தோற்றாலும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அந்த அணி ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது. மிகவும் மோசமாக தோற்றால் மட்டுமே அந்த அணி வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும்.

  ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் தலா 6 புள்ளிகள் பெற்றுள்ளன. இன்றைய ஆட்டங்களில் இரு அணிகளும் வெற்றிபெறும் போது 8 புள்ளியை பெறும். அப்போது 3 நாடுகளும் (இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா) சம நிலையை பெறும்.

  ரன் ரேட் அடிப்படையில் 2 நாடுகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இதில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவை விட தற்போது ஆஸ்திரேலியா ரன் ரேட்டில் சிறப்பான நிலையில் உள்ளது.

  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, இங்கிலாந்திடம் தென் ஆப்பிரிக்கா தோற்றால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

  வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணிகள் வெற்றி பெற்றால், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அரைஇறுதிக்கு தகுதி பெறும். வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றால் இங்கிலாந்து முதல் அணியாக தகுதி பெறும். 2-வது இடத்திற்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையே போட்டி நிலவும். ரன் ரேட்டில் முன்னிலை பெறும் அணி தகுதி பெறும்.

  இந்த பிரிவில் இலங்கை (4 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (2 புள்ளி), வங்காளதேசம் (வெற்றி எதுவும் பெறவில்லை) அணிகள் ஏற்கனவே அரை இறுதிக்கு வாய்ப்பை இழந்துவிட்டன.

  Next Story
  ×