என் மலர்
செய்திகள்

சக்லைன் முஷ்டாக்
இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் மோதினால் நன்றாக இருக்கும்: சக்லைன் முஷ்டாக் கருத்து
இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் ஒருமுறை இறுதிப்போட்டியில் விளையாடும் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும் என சக்லைன் முஷ்டாக் தெரிவித்தார்.
துபாய்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான சக்லைன் முஷ்டாக் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் ‘இந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் அதாவது இறுதிப்போட்டியில் சந்தித்தால் மகிழ்ச்சி அடைவேன். மீண்டும் ஒரு முறை விளையாடும் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும்.
முந்தைய ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி எங்களது வீரர்களை கட்டித்தழுவி பாராட்டிய விதம், அவர்களிடம் டோனி உரையாடியது, எங்களது வீரர்களின் தன்னடக்கம் இவை எல்லாம் நாம் எல்லோரும் மனிதர்கள், ஒருவருக்கொருவர் நேசிக்கிறோம், இது வெறும் விளையாட்டு தான் என்ற தகவலை உலகிற்கு உணர்த்துவதாக இருந்தது.

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். நட்புறவு வெற்றி பெறட்டும். பகைமை தோற்கட்டும் என்று நான் எப்போதும் சொல்வது உண்டு. இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் ஐ.சி.சி. மகிழ்ச்சி அடையும். ரசிகர்களும் உற்சாகம் அடைவார்கள்’ என்றார்.
Next Story






