என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறாத விரக்தி - சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரிடையரான வீரர்
Byமாலை மலர்23 Oct 2021 1:03 AM GMT (Updated: 23 Oct 2021 1:03 AM GMT)
டி 20 உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடிய நெதர்லாந்து 3 போட்டிகளிலும் தோற்றதால் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
சார்ஜா:
டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதையடுத்து, சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது.
இதற்கிடையில், உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடிய நெதர்லாந்து அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதனால் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில், உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறாததால் வருத்தமடைந்த நெதர்லாந்து அணி ஆல்-ரவுண்டர் ரியான் டென் டஸ்ஜெட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரிடையராவதாக நேற்று அறிவித்தார்.
ரியான் 2006-ல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். 2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரியான் 119 ரன்கள் குவித்தார். அதேபோல், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 106 ரன்கள் குவித்தார். ரியான் டென் டெஸ்ஜெட் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 1,541 ரன்கள் குவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...இந்தியா-இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி - அடுத்த ஆண்டு ஜூலையில் நடத்த முடிவு
Next Story
×