என் மலர்

  செய்திகள்

  வெற்றி மகிழ்ச்சியில் டெல்லி அணி வீரர்கள்
  X
  வெற்றி மகிழ்ச்சியில் டெல்லி அணி வீரர்கள்

  ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
  அபுதாபி:

  ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இன்று அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

  இதனையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 43 ரன்கள் எடுத்திருந்தார். 

  இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் துவக்கத்தில் இருந்தே தடுமாறிய அந்த அணி 55 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தது. அணியின் கேப்டன் சாம்சன் மட்டும் நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 53 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்தார். அந்த அணியில் சாம்சன், மஹிபால் ஆகிய இரண்டு பேரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. 

  ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. டெல்லி தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
  Next Story
  ×