என் மலர்

  செய்திகள்

  டெல்லி அணி
  X
  டெல்லி அணி

  ஐபிஎல் 2021- ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் பேட்டிங்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ள டெல்லி அணி, இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.
  அபுதாபி:

  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இன்று அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் ரி‌ஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ்-சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில், ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

  ராஜஸ்தான் அணியில் எவின் லெவிஸ், கிறிஸ் மோரிஸ் நீக்கப்பட்டு, தப்ரைஸ் ஷாம்சி, டேவிட் மில்லர் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஸ்டாய்னிசுக்கு பதில் லலித் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

  ராஜஸ்தான் அணி

  டெல்லி அணி: பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஹெட்மயர், லலித் யாதவ், ஏஆர் படேல், அஷ்வின், ரபாடா, நோர்ட்ஜே, அவேஷ் கான்

  ராஜஸ்தான் அணி:  ஜெய்ஸ்வால், சாம்சன், லிவிங்ஸ்டன், மில்லர், லோம்ரர், பராக், தேவாதியா, கார்த்திக் தியாகி, சகாரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷாம்சி.

  டெல்லி அணி 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

  ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 5-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. 
  Next Story
  ×