என் மலர்

  செய்திகள்

  வெங்சர்க்கார்
  X
  வெங்சர்க்கார்

  இந்திய டி20 அணிக்கு இவர் தகுதியானவர்: வெங்சர்க்கார் சொல்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விராட் கோலி டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக இருக்கும் நிலையில், அடுத்த கேப்டன் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.
  விராட் கோலி மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். வேலைப்பளு காரணமாக டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

  இதனால் அடுத்த கேப்டன் யார்? என்ற விவாதம் எழுந்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் ரோகித் சர்மா அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

  இந்த நிலையில் வெங்சர்க்கார் விராட் கோலி விலகல் குறித்து கூறுகையில் ‘‘ரோகித் சர்மா அடுத்த கேப்டன் பதவிக்கு தகுதியானவர். ஏனென்றால், அவருக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், மிகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். 2018-ல் அவரது தலைமையின் கீழ் இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிகவும் அபாரமாக செயல்பட்டுள்ளார்.

  விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவு நான் எதிர்பார்த்ததுதான். 8 வருடங்களாக இந்திய அணியை நம்பர் ஒன் அணியாக வழி நடத்திச் சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் பேட்டிங் செய்ய செல்லும்போது, அவருக்கு மிகப்பெரிய அளவில் நெருக்கடி உண்டாகிறது. தற்போது அவர் முடிவு எடுத்துள்ள நேரம் சரியானத. அவர் டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்து கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என நம்புகிறென். டி20 கேப்டனாக கடைசி வெற்றி இதுவாக இருக்கனும்’’ என்றார்.
  Next Story
  ×