search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்ட நாயகன் விருது பெற்ற மார்கிராம்
    X
    ஆட்ட நாயகன் விருது பெற்ற மார்கிராம்

    முதல் டி 20 போட்டி - 28 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இலங்கை அணி 2-1 என தொடரைக் கைப்பற்றியது.
    கொழும்பு:

    தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  

    அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. மார்கிராம் 48 ரன்னும், ஹென்ரிக்ஸ் 38 ரன்னும், டி காக் 36 ரன்னும் எடுத்தனர்.
     
    ஹசரன்காவை பாராட்டும் சக வீரர்கள்

    164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் தினேஷ் சண்டிமால் ஓரளவு தாக்குப் பிடித்து 66 ரன்கள் எடுத்தார். சமிகா கருணரத்னே 22 ரன்னும் எடுத்தனர்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது மார்கிராமுக்கு வழங்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
    Next Story
    ×