search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்மா ராட்கானு
    X
    எம்மா ராட்கானு

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் - லேலா பெர்னாண்டஸ், எம்மா ராட்கானு இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

    உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் தோற்று வெளியேறினார்.
    நியூயார்க்:

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சபலென்கா (பெலாரஸ்), 73-ம் நிலை வீராங்கனையான கனடாவின் 19 வயது லேலா பெர்னாண்டசுடன் மோதினார்.

    இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லேலா பெர்னாண்டஸ் 7-6, 4-6,  6-4 என்ற நேர்செட்டில் சபலென்காவை முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

    இதேபோல், மற்றொரு அரையிறுதியில், தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, தகுதிச்சுற்று மூலம் முன்னேறிய 150-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தை சேர்ந்த 18 வயது இளம் புயல் எம்மா ராட்கானுவை எதிர்கொண்டார்.

    இதில் எம்மா ராட்கானு 6-1, 6-4 என்ற நேர்செட்டில் மரியா சக்காரியை வெளியேற்றி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் ‘ஓபன் எரா’வரலாற்றில் (1968-ம் ஆண்டு முதல்) அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் தகுதிச்சுற்று வீராங்கனை என்ற சிறப்பை தனதாக்கினார். இந்த போட்டித் தொடரில் அவர் இதுவரை ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×